நம்ப வைத்துக் கழுத்தறுத்து முதுகில் குத்திய ரணிலும், பன்னிரண்டு வருடகால
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சியில் தமிழருக்குத் தீர்வைத் தராது துரோகம் செய்த
சந்திரிகா அம்மை யாரும், தமிழரைக் கொன்று குவித்தார் எனக் குற்றம் சுமத்திய சரத்
பொன்சேகாவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கு ஹீரோக்களானது எப்படி
என ஜனாதிபதியின் இந்து மத விவகார இணைப்பாளர் பிரம்மஸ்ரீ பாபு சர்மா இராமச்சந்திரக்
குருக்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.
உண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தமிழர் பிரச்சினைகளைப் பேசித்
தீர்த்துக்கொள்ளலாம். ஆனால் தமிழ் விரோதப் போக்குடைய மூன்று தலைவர்களுடன் கூட்டு
வைத்துள்ள மனோ கணேசன் தமிழர் பிரச்சினைக்கு எப்படி தீர்வினைக் காணவுள்ளார் என்பது
மக்களுக்குப் புரியாத புதிராக உள்ளதாகவும் பாபு சர்மா தெரிவித்துள்ளார்.
மூன்று தமிழர் விரோதப் போக்குடைய தலைவர்கள் மட்டுமல்ல மனோ நட்பு வைத்துள்ள
கூட்டணியில் ஹாதிக ஹெல உருமய கட்சியின் தலைவர்கள் பலரும் உள்ளனர். குறிப்பாக
சம்பிக்க ரணவக்க, அத்துருலிய தேரர் ஆகியோரே தமிழருக்கான தீர்வு விடயத்தில்
ஜனாதிபதியைத் தவறாக வழிநடத்தினர் என மனோ முன்னர் பல தடவைகள் குற்றம்
சாட்டியுமுள்ளார். ஆனால் இன்று அவர்களுடனேயே ஒரே மேடையில் கைகோர்துள்ளார். உண்மையில்
மனோ கணேசனின் நிலைப்பாட்டினை அறிந்து கொள்ள முடியாமலுள்ளது எனவும் பாபு சர்மா
தெரிவித்தார்.
கடந்த பல வருடங்களாக ஜனாதிபதியை அதிகம் விமர்சித்து விட்டதால் இனி எப்படி அவருடன்
இணைவது என மனோ யோசனை செய்கிறாரோ தெரியவில்லை. ஆனால் அவர் அவ்விடயத்தில் ஒருவிதமான
சிறு தயக்கமும் காட்டத் தேவையில்லை. அவர் ஒரு வார்த்தை சொன்னால் நானே ஜனாதிபதியிடம்
அவரை அழைத்துச் செல்லத் தயாராகவுள்ளேன். ஜனாதிபதியும் அவரை நிச்சயம் வரவேற்பார்.
ஏனெனில் மனோ ஒரு சிலரைப் போல ஜனாதிபதிக்கு எப்போதுமே முதுகில் குத்தியது கிடையாது.
அவர் தனது கருத்துக்களை அழகு தமிழில் அறிக்கையாக தமிழ்ப் பத்திரிகைகளிலேயே
பிரசுரித்து வந்துள்ளார். இன்றும் செய்து வருகிறார். அவற்றில் சிலவற்றை மொழி
பெயர்த்து சில சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி கூட இரசித்து வாசித்ததையும் நான்
கண்டிருக்கிறேன்.
மனோ கணேசனில் எனக்கு பிடித்த இன்னொரு விடயம் அவர் சிலரைப் போன்று அமைச்சர்
பதவிகளுக்கு எப்போதுமே ஆசைப்பட்டது கிடையாது. அதனால் அவர் ஜனாதிபதியுடன்
இணைந்திருப்பதே சிறந்தது. தமிழர் விரோதக் கூட்டணியுடன் கூட்டு வைப்பது அவரது
கொள்கைகளுக்கு முரணானது என அவரிடமே பல புத்திஜீவிகள் எடுத்துரைத்தும் உள்ளனர். எனவே
அவர் உடனடியாக அரசாங்கத்துடன்

0 Comments