தமது சுயநலத்திற்காக மஹிந்த ராஜபக்சவோடு கோபித்துக்கொண்டு மைத்ரியை ஆதரிக்கிறார்கள் முஸ்லிம் தலைவர்கள் என குற்றஞ்சுமத்தியுள்ளார் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா. அதிலும் குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் அடிப்படைகளை மறந்து இன்று எதிரணியில் இணைந்திருக்கிறது எனவும் தெரிவித்துள்ள அவர், தன்னால் முன்வைக்கப்பட்ட எந்தவொரு கேள்விக்கும் மு.கா இதுவரை பதில் தராமல் மழுப்பி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் காத்தான்குடி முதலாம் குறிச்சியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்த அவர், மு.கா தலைவர் பங்கேற்கும் அடுத்த கூட்டத்திலாவது தனது கேள்விகளுக்கு பதில் தர வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

0 Comments