Ticker

6/recent/ticker-posts

மக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வூட்டுகிறோம்: தேர்தல் ஆணையாளர்

தேர்தலில் வாக்களிப்பது ஒவ்வொருவரினதும் ஜனநாயக உரிமை என்பதை வலியுறுத்தி பின்தங்கிய பகுதிகளில் தாம் தேர்தல் விழிப்புணர்வுக் கூட்டங்களை நடாத்தி வருவதாக தகவல் வெளியிட்டுள்ளார் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய.
வாக்களிப்பு மூலம் மக்கள் தரும் ஆணையை மாற்றியமைக்க தான் எந்த சக்திக்கும் இடமளிக்கப்போவதில்லையெனவும் தெரிவித்துள்ள அவர், மிகவும் பின்தங்கிய தேர்தல் தொடர்பான அக்கறையற்ற பிரதேசங்களை தெரிவு செய்து இவ்வாறான செயற்திட்டங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments