தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நிர்மாணத்துறை, பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவிற்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று (14) முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.
அமைச்சராக பதவி வகித்த காலப்பிரிவில் முறையற்ற விதத்தில் சொத்துக் குவிப்பு தொடர்பான இம்முறைப்பாட்டை தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச மேற்கொண்டுள்ளார்.
கடுவெல பிரதேசத்தில் இரண்டு சொகுசு வீடுகளை நிர்மாணித்தல், அப்பிரதேசத்தில் காணிகளை உடைமையாக்கிக்கொள்ளல் மற்றும் விமல் வீரவன்சவின் மனைவியின் சொத்து சேர்ப்பு தொடர்பிலும் விசாரணை நடாத்துமாறும் அம்முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Comments