ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை (15) இடம்பெறவிருப்பதாக அறியவருகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்களின் ஏற்பாட்டினால் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இச்சந்திப்பில் நிமல் சிரிபால டி சில்வா, சுசில் பிரேம ஜயந்த, ஆனுர பிரியதர்ஷன யாபா, ஜோன் செனவிரத்ன மற்றும் ஸ்ரீ.ல.சு.க. சிரேஷ்ட உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

0 Comments