Ticker

6/recent/ticker-posts

நாட்டிற்கு தேவை ஒரு நல்ல மனிதரேயன்றி ஓர் அரசன் அல்ல - மைத்ரீ

இன்று (11) கண்டி தலதா மாளிகை்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்ரீபால சிறிசேன அங்கு நடைபெற்ற சமய அனுஷ்டானங்களில் கலந்துகொண்ட பின் மக்கள் முன் உரை நிகழ்த்தினார். ஜனாதிபதியுடன் பிரமதர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சந்திரா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரும் கண்டிக்கு சென்றிருந்தனர். ஜனாதிபதியின் உரையைக் கேட்க பல்லாயிரக்கணக்கான மக்கள் தலதா மாளிகை முன் திரண்டிருந்தனர். 


கூட்டு அரசாங்கம் ஒன்றை அமைக்க அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்த ஜனாதிபதி, மக்கள் அனுபவித்து வரும் பொருளாதாரச் சுமைகளை தான் நன்கு அறிவதாகவும் வறுமையை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையின் அதிகாரங்களை பாராளுமன்றம், கபினட் மற்றும் நீதித்துறை போன்றவற்றிற்கு பகிர்ந்தளிக்கப்போவதாகவும் அவர் வாக்குறுதியளித்தார். 

நாட்டிற்கு தேவை ஒரு மன்னரல்ல ஒரு நல்ல மனிதனே எனவும் அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டிருந்தார். 


Post a Comment

0 Comments