Ticker

6/recent/ticker-posts

மைத்திரியின் பாதுகாப்பை அதிகப்படுத்தக்கோருகிறாா் ஆளும் கட்சி அமைச்சர் டளஸ் அலகப்பெரும

பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுப்பதாக அமைச்சர் டளஸ் அழகபெரும இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் நோக்கில் பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. அரசாங்கம் எந்த தேர்தல் வன்முறை செயல்களையும் அனுமதிக்காது எனவும் டளஸ் அழகபெரும மேலும் தெரிவித்துள்ளார்.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனா கலந்து கொண்ட அண்மைய தேர்தல் பிரசாரக்கூட்டங்களின் போது ஆளுங்கட்சியின் ஆதரவாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் ஒரு தரப்பினர் குழப்பங்களை விளைவித்து வரும் நிலையிலேயே அமைச்சர் டளஸ், இவ்வாறு கூறியுள்ளார்

Post a Comment

0 Comments