Ticker

6/recent/ticker-posts

விமல் வீரவன்சவின் கட்சி உடைகிறது!

அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் பெரும்பான்மையான முக்கியஸ்தர்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவுக்கு ஆதரவாக கட்சி தாவியுள்ளனர்.
நேற்றைய தினம் தேசிய சுதந்திர முன்னணியின் சுமார் 11
முக்கியஸ்தர்கள் பொது வேட்பாளருக்கு ஆதரவான நிலைப்பாட்டில் கட்சி தாவியுள்ளனர்.
இவர்களில் ஊவா மாகாண சபை தேர்தலின் போது ஆளுங்கட்சிக்கு தாவிய உதயகுமார, அம்பாறை மாவட்டத்தலைவர் அனுர முனசிங்க, அநுராதபுரம் மாவட்ட செயலாளர் ஜனக திசாநாயக்க, படல்கும்புறை முன்னாள் பிரதேச சபைத் தலைவர் ஸ்ரீசிந்தக, கடுவெல முன்னாள் நகரமன்ற உறுப்பினர் பிரபாத் ஆகியோரும் உள்ளடங்கியிருந்தனர்.
நாளைய தினம் தேசிய சுதந்திர முன்னணியின் இன்னுமொரு முக்கியஸ்தருடன் மேலும் பலர் கட்சி தாவக் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments