நேற்று புதன்கிழமை ஆப்கானிஸ்தானில் முன்னெடுக்கப்பட்ட றொக்கட் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதுடன் 40 பேர் காயமடைந்துள்ளனர். திருமண நிகழ்வு இடம்பெற்றுக் கொண்டிருந்த வீடொன்றே இந்த தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் ஹெல்மன்ட் பகுதியில் திருமண நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேற்கொள்ளப்பட்ட றொக்கட் தாக்குதலில் திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் அதிகமானோர், மணப் பெண்ணை அழைத்து வர வெளியே கூடியிருந்த விருந்தினர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் காயமடைந்தவர்கள் அருகில் இருந்த வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று புதன்கிழமை ஆப்கானிஸ்தான் இராணுவம் மற்றும் தலிபான்களுக்கிடையில் உக்கிர தாக்குதல் இடம்பெற்றிருந்தது. இதன்போது மேற்கொள்ளப்பட்ட றொக்கட் தாக்குதல் குறித்த திருமண வீட்டை தாக்கியதிலேயே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் இதுவரை காலமும் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த நேட்டோ மற்றும் அமெரிக்க படையினர் நேற்றுடன் அங்கிருந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Comments