2011ம் ஆண்டு முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கலை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
யுத்த சூழ்நிலையில் வெளிநாடுகளுக்குச் சென்று
குடியேறியவர்கள் மற்றும் வேறு காரணங்களுக்காகவும் வெளிநாட்டுப்பிரஜாவுரிமையைப் பெற்றவர்கள் மீண்டும் இலங்கைப் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கல் நடைமுறையில் இருந்த போதும் அரசாங்கம் முழு அளவிலான கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் அந்நடைமுறை நிறுத்தப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து முதலில் ஐந்து வருடங்கள் தற்காலிக விசா அதனைத் தொடர்ந்த குடியுரிமைக்கான பரிசீலனை என பல்வேறு நிபந்தனைகள் குறித்து அவ்வப்போதும் அறிவிப்பும் வெளியாகியிருந்த நிலையில் இப்போது அவ்வாறான தேவையையும் நீக்கி விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தாம் வாழும் நாட்டின் தூதரகம் ஊடான அத்தாட்சியும் அதேவேளை குடியுரிமை விண்ணப்பத்திற்கான நியாயமான காரணமும் கண்டறியப்படும் நிலையில் விண்ணப்பம் பரிசீலிக்கப்படப்போவதாகவும் யுத்த சூழ்நிலையில் வெளியேறி வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி தமயந்தி ஜயரத்ன நேற்றைய தினம் இத்தகவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments