முற்போக்கு சோஷலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்ணம் இன்று (01) கொழும்பை வந்தடைந்தார். இன்று ராஜகிரியவில் நடைபெறவிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கலந்துகொள்ளவிருக்கிறார்.
குமார் குணரட்னம் 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ம் திகதி நொயல் முதலீகே
என்ற அவுஸ்திரேலிய கடவுச் சீட்டின் ஊடாக நாட்டுக்குள் பிரவேசித்தார். 2012
ஏப்ரல் மாதம் 6ம் திகதி குமார் குணரட்னம் மற்றும் முற்போக்கு சோஷலிச கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் ஆகியோர் கடத்தப்பட்டு மூன்று
நாட்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். பின்னர், பொலிஸாரினால் கைது
செய்யப்பட்ட குணரட்னம், அவுஸ்திரேலியாவிற்கு நாடு கடத்தப்பட்டார்.
இதேவேளை, அபராதப் பணத்தைச் செலுத்தினால் குமார் குணரட்னம் இலங்கைக்கு
விஜயம் செய்ய முடியும் என முற்போக்கு சோஷலிச கட்சி இதற்குமுன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Comments