ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர்
மைத்திரிபால சிரிசேனவுக்கு ஆதரவு வழங்குவதாக தனது தந்தை எடுத்த தீர்மானத்தை
எந்தக் காரணம் கொண்டும் அங்கீகரிக்க முடியாதெனவும், தான் ஒரு போதும்
எதிரணியில் இணையப் போவதில்லையெனவும் எதிரணியுடன் இன்று இணைந்துகொண்ட உயர்
கல்விப் பிரதி அமைச்சர் நந்தமித்ர ஏக்கநாயக்கவின் மகனும் மத்திய மாகாண
சபையின் ஐ.ம.சு.முன்னணி உறுப்பினருமான சிந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
தனது தந்தையின் கட்சி தாவல் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர்
சந்திப்பொன்று இன்று மாத்தளையில் நடைபெற்றுள்ளது.
இதில் கலந்துகொண்டு
கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று
அறிவித்துள்ளது.

0 Comments