Ticker

6/recent/ticker-posts

மங்கள்யான் செவ்வாயின் சுற்றுப்பாதையில் 100 நாட்கள் பூர்த்தி

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்டிருந்த மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு இன்றுடன், 100 நாட்கள் பூர்த்தியாகின்றன.

செவ்வாய்க்கிரகத்தை ஆராய்வதற்காக மங்கள்யான் என்ற விண்கலமானது 450 கோடி ரூபா செலவில் ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவிலிருந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி ஏவப்பட்டது.

சுமார் 10 மாதங்களின் பின்னர், கடந்த செப்டம்பர் 25ஆம் திகதி விண்கலத்தை வெற்றிகரமாக நிலைநிறுத்தி, வரலாற்று ரீதியான சாதனைப் புரிந்தது.

இது அங்கு ஆய்வு நடத்தி செவ்வாய் கிரகத்தில் தண்ணீர், கனிம வளம் உள்ளதா எனவும் செவ்வாயில் மீத்தேன் வாயு உள்ளதா என்பதையும் மங்கள்யான் கண்டறிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments