Ticker

6/recent/ticker-posts

புதிய அரசை உருவாக்க மக்கள் எம்மோடு அணிதிரண்டுள்ளனர்: மைத்ரிபால சிறிசேன



நான் 49 வருடங்கள் அரசியல் அனுபவம் கொண்டவன், மிகுந்த தேர்தல் அனுபவம் கொண்டவன் எனும் அடிப்படையில் இன்று மாற்றத்தை விரும்பி, புதிய அரசை உருவாக்க மக்கள் எம்மோடு அணிதிரண்டிருக்கிறார்கள் என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும் என தெரிவித்துள்ளார் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன.
மாற்றத்தை வேண்டி நிற்கும் மக்கள் உணர்வை
புரிந்துகொள்ள முடியாதவர்கள் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் கள யதார்த்தை எதை உணர்த்தியிருக்கிறது என்பது அனைவரும் அறிந்த விடயம் எனவும் தெரிவித்துள்ள அவர், வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று கேட்க வேண்டியது இரண்டு கேள்விகள். ஒன்று: நாட்டைக் காப்பாற்றப் போகிறோமா அல்லது ராஜபக்சவின் குடும்பத்தைக் காப்பாற்றப் போகிறோமா என்பவைதான் அவை.
அதன் பின் இந்தத் தேர்தல் வரலாறாவதை யாராலும் தடுக்க முடியாது எனவும் அவர் நேற்றைய தினம் சிலாபத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் வைத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments