Ticker

6/recent/ticker-posts

போக்கோ ஹராம் தீவிரவாதிகள் மீது ஐ.நா நடவடிக்கை எடுக்குமா?


போக்கோ ஹராம் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கும் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் கூட்டு முயற்சியை ஐக்கிய நாடுகள் அமைப்பு வரவேற்றுள்ளது.
போக்கோ ஹராம் தீவிரவாத அமைப்பு நைஜீரியா, சாத், நைஜர் போன்ற ஆப்பிரிக்க நாடுகளை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. அடிக்கடி பொது மக்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் மீது தாக்கதல் மேற்கொண்டு வரும் இந்த அமைப்பைக் கட்டுப்படுத்துவது கடினமான பணியாக இருந்து வருகிறது. இந்நிலையில், போக்கோ ஹராம் அமைப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை கூட்டு முயற்சியாக மேற்கொள்ள ஆப்பிரிக்க ஒன்றியம் முடிவு செய்துள்ளது. இந்த முடிவை ஐக்கிய நாடுகள் அமைப்பு வரவேற்றுள்ளது. இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலர் பான் கீ மூன், பல நாடுகள் இணைந்து எடுக்கும் கூட்டு நடவடிக்கைக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments