ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஜப்பானை சேர்ந்த மற்றொரு பிணைக் கைதியின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக இணையதளங்களில் வெளியாகியுள்ள வீடியோ, ஜப்பான் அரசுக்கு ஒரு செய்தி எனத் தொடங்குகிறது. பிணைக் கைதி கென்ஜி கோடோவும், பயங்கரவாதி ஒருவரும் வீடியோவில் இடம்பெற்றுள்ளனர். கோடோவின் தலையை துண்டிப்பதற்கு முன்பாக, பயங்கரவாதி ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேவை எச்சரித்துள்ளனர்.

0 Comments