Ticker

6/recent/ticker-posts

பருப்பு தொழிற்சாலை விபத்து இளைஞனின் சடலம் மீட்பு!

களனி - பட்டிவல பிரதேச பருப்பு தொழிற்சாலையில் இடம்பெற்ற விபத்தில் காணாமல் போயிருந்த 24 வயது இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

பருப்பு பிரித்தெடுக்கும் தொழிற்சாலையில் நேற்று முன்தினம் இரவு இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. 

பருப்பு களஞ்சியப்படுத்தி வைத்திருந்த 90 அடி உயரமான தடுப்பு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் காயமடைந்ததுடன் மற்றுமொருவர் பருப்புக்குள் மறைந்து காணாமல் போயிருந்தார். 

எனினும் இன்று (12) அதிகாலை குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments