ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை அமெரிக்காவில் இருந்து நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
முன்னைய அரசாங்கத்தின் ஊழல்கள் மற்றும் மோசடிகளை கண்டுபிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள நிதி மோசடி பொலிஸ் விசாரணை பிரிவு இந்தக் கோரிக்கையை சட்டமா அதிபரிடம் விடுத்துள்ளது.
திவிநெகும திட்டத்தின் போது பசில் ராஜபக்ச பாரியளவு நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் இது தொடர்பில் முழுமையான தகவல்களை திரட்டுவதற்கு பசில் ராஜபக்சவை விசாரணை செய்ய வேண்டியுள்ளதாக நிதி மோசடி தொடர்பான பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

0 Comments