Ticker

6/recent/ticker-posts

பொலிஸ் ஊடக பேச்சாளா் அஜித் ரோஹனவிற்கு ஆப்பு!

பொலிஸ் ஊடக பேச்சாளா் அஜித் ரோஹனவிற்கு திடீா் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அஜித் ரோஹன தற்போது மலேசியாவில் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருக்கிறாா். வெளிநாட்டு பயணம் மேற்கொணடிருந்த  நிலையில் அவரை இடமாற்றம் செய்திருப்பது பொலிஸ் திணைக்கள மட்டத்தில் சா்ச்சையை கிளப்பியிருப்பதாக அறிய வருகிறது.

அஜித் ரோஹன கடந்த ஆட்சிக்காலத்தில் மஹிந்த அரசாங்கத்திற்கு தேவையான விதத்தில் பொலிஸ் தகவல்களை வடிவமைத்தவா் என்று பலராலும் குற்றம் சாட்டப்பட்டவராவாா். அளுத்கம இனவாத வன்முறையின் போது ஒரு பக்கச் சாா்பாக  தகவல்களை வழங்கி முஸ்லிம்களின் கடும் கோபத்திற்கு உள்ளான ஒருவராகவும் கருதப்படுகிறாா்.

புதிய பொலிஸ் ஊடக பேச்சாளராக உதவி பொலிஸ் அத்தியட்சகா் ருவான் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளாா்.


Post a Comment

0 Comments