அமெரிக்காவுடன் அணு ஆயுத போரில் ஈடுபட வட கொரியா தயாராக இருப்பதாக, பிரிட்டனுக்கான வடகொரிய தூதர் ஹியுன் ஹக்-பாங் தெரிவித்துள்ளார்.
வட கொரியாவின் எல்லைப்பகுதியில் தென் கொரியா மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகளின் பயிற்சி தொடருமானால் எப்போது வேண்டுமானாலும் அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.
மேற்கு லண்டனில் உள்ள அக்டன் தூதரக அலுவலகத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், இவ்வாறு தெரிவித்தார். வட கொரியா எப்போதும், அமைதியை விரும்புவதாக கூறிய அவர், போரை கண்டு அஞ்சவில்லை என்றும் தெரிவித்தார். இதுவே அரசின் கொள்கை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவும், தென் கொரியாவும் போர் பயிற்சியில் ஈடுபடுவது ஆக்கிரமிப்பு முயற்சி என வட கொரியா தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்காவும், அதன் கூட்டணி நாடுகள் அனைத்தும் இது பாதுகாப்பு முன்னெச்சரிகை என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Comments