முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவங்ச, டளஸ் அழகப் பெரும, பந்துல குணவர்தன உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 18 பேரையும் எதிர்வரும் 8ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு, புதுக்கடை மாவட்ட நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்ததாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
டளஸ் அழகப் பெரும
பந்துல குணவர்தன
காமினி லொக்குகே
விமல் வீரவங்ச
எச்.எம். சந்திரசேன
வீரகுமார திஸாநாயக்க
ஜகத் குமார
அஜந்த லியனகே
மதுமாதவ அரவிந்த
ரொஜர் செனவிரத்ன
சரத் வீரசேகர
ரோஷான் ரணசிங்க
ஜயந்த கெட்டகொட
உதித்த லொக்குபண்டார
பிரசன்ன ரணதுங்க
உபாலி
கொடிகார
சுனில் ஜயமினி
மொரத்தொட்டுவே ஆனந்த தேரர்
மெதகொட அபேசித்த தேரர் ஆகியோருக்கே இந்த அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பந்துல குணவர்தன
காமினி லொக்குகே
விமல் வீரவங்ச
எச்.எம். சந்திரசேன
வீரகுமார திஸாநாயக்க
ஜகத் குமார
அஜந்த லியனகே
மதுமாதவ அரவிந்த
ரொஜர் செனவிரத்ன
சரத் வீரசேகர
ரோஷான் ரணசிங்க
ஜயந்த கெட்டகொட
உதித்த லொக்குபண்டார
பிரசன்ன ரணதுங்க
உபாலி
கொடிகார
சுனில் ஜயமினி
மொரத்தொட்டுவே ஆனந்த தேரர்
மெதகொட அபேசித்த தேரர் ஆகியோருக்கே இந்த அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ச நேற்றைய தினம் லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியிருந்தார். இதன்போது குறித்த இடத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படக் கூடாது என நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.
எனினும், இந்த உத்தரவையும் மீறி கோதாபய ராஜபக்சவிற்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.
நீதிமன்ற தடையுத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தி, நீதிமன்றத்தை அவமதித்ததாகவே இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
0 Comments