Ticker

6/recent/ticker-posts

ஆா்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை!

இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார். 
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கையூட்டல் மற்றம் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்குவதற்காக சென்றிருந்த போது, அவருக்கு ஆதரவாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது. 

எனினும் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்த நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்திருந்தது. 

இந்த நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபவர்கள் குறித்த அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் முன்வைக்கவிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments