Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் பாரிய முறைகேடுகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் பாரிய முறைகேடுகள் இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் ஆராய்ந்த சட்டத்தரணி ஜே.சி.வெலியமுன தலைமையிலான விசாரணைக் குழு, இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
குறிப்பாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மைத்துனருமான நிசாந்த விக்ரமசிங்க, தமது பதவியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன், விமான சேவையின் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதால் பல மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நுழைவுத் தேர்வில் சித்திபெறாத மற்றும் தகைமையற்றவர்களை பணிக்கமர்த்தியமை, ஒப்பந்தங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டமை, விமானப் பணியாளர்கள் சட்டவிரோத ஆட்கடத்தலுக்கு துணை நின்றமை உள்ளிட்ட பலவாறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
அதுதவிர ஏராளமான அநாவசிய செலவுகள் செய்யப்பட்டமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டுமென, சட்டத்தரணி வெலியமுன தலைமையிலான விசாரணைக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

Post a Comment

0 Comments