தேசியக் கொடியை சிதைப்பது தண்டனைக்குாிய குற்றமாகும். தேசியக் கொடியை கையாள்வது தொடா்பாக அரசியல் சாசன சட்ட விதிகள் தெளிவு படுத்தியுள்ளன. தேசியக்கொடியில் மாற்றங்களை ஏற்படுத்துவதோ, அதை ஒழுங்கற்ற முறையில் பயன்படுத்துவதோ தண்டனைக்குாிய குற்றமாகும்.
அண்மையில் கோத்தாபய ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாாிக்கக் கூடாதென மஹிந்த ராஜபக்ஷ பினாமிகள் சிங்கள இனவாதிகளோடு இணைந்து ஆா்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனா். நீதிமன்றம் இந்த ஆா்ப்பாட்டத்திற்கு ஏற்கனவே தடை விதித்திருந்தது. நீதிமன்ற கட்டளைகளை மீறி இடம்பெற்ற இந்த ஆா்ப்பாட்டம் இலங்கையின் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் சமூகங்களை இலக்கு வைத்ததாக அமைந்திருந்ததைக் கண்டு அதிா்ச்சியுற்றனா்.
மஹிந்த குடும்பத்தினா் மீது சுமத்தப்பட்டிருக்கும் இந்த திருட்டு, மோசடி தொடா்பான விசாரணைகளுக்கும் சிறுபான்மை சமூகங்களுக்கும் தொடா்பே இல்லாத நிலையில் சிறுபான்மை சமூகங்களை அவமதிக்கும் வகையில் தேசியக் கொடியில் இருக்கும் சிறுபான்மை தொடா்பான அடையாளங்களை நீக்கிய கொடிகளை இந்த மஹிந்த ஆதரவு கோஷ்டியினா் சுமந்து வந்திருந்தனா்.
இலங்கையின் தேசிய கொடியில் இருக்கும் சிறுபான்மை இனத்தைக் தமிழ், முஸ்லிம் மக்களைக் குறிக்கும் மஞ்சள் மற்றும் பச்சை நிறக் கட்டங்களை நீக்கப்பட்டிருந்த புதுவடிவிலான தேசியக்கொடியை முன்னாள் அமைச்சா்கள் மற்றும் பாராளுமன்ற அங்கத்தவா்களும் கைகளில் ஏந்தி கோஷமிட்டது அதிா்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தமது குற்றங்களை, களவுகளை மறைப்பதற்கு மஹிந்த அரசு கடந்த தோ்தலின் போதும் இதே பாணியிலான இனவாத நடைமுறையையே கையாண்டது.
அரசுக்கு எதிராக ஆா்ப்பாட்டம் செய்ய முற்பட்ட இவா்கள், மைத்திாியையோ , ரணிலையோ எதிா்க்காமல் சிறுபான்மை சமூகங்களை குறிவைப்பதற்கான காரணம் என்ன? இவா்களின் இந்த செயற்பாடு இனிவரும் நாட்களில் இந்நாட்டு சிறுபான்மை சமூகங்களை இலக்கு வைக்ககும் சதித் திட்டமொன்றை அரங்கேற்ற முயற்சிப்பதை அவதானிக்க முடிகிறது.
சட்டத்தை துச்சமாக மதித்து செயற்படும் தோல்வி கண்ட மஹிந்த கோஷ்டியின் இந்த அப்பட்டமான இனவெறியை சிறுபான்மை சமூகங்கள் கடுமையாக எதிா்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் தேசியக்கொடியை சிதைத்து சிறுபான்மை மக்களுக்கு விடுத்திருக்கும் அச்சுறுத்தலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தை கோர முன்வரவேண்டும்.
.

0 Comments