Ticker

6/recent/ticker-posts

ஜோன்ஸ்டன் பெனாண்டோவை 11ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பொ்னாண்டோ எதிர்வரும் மே 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

சதோச நிறுவனத்தில் கொள்வனவு செய்த பொருட்களுக்கு பணம் செலுத்தாமல் 5 மில்லியன் மோசடி செய்ததாக ஜோன்ஸ்டனுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டது. 
இதனை அடுத்து நேற்று பொலிஸ் நிதி மோசடி தடுப்பு பிரிவில் விசாரணைக்கு அழைக்கப்பட்டு ஜோன்ஸ்டன் கைது செய்யப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். 

இன்று குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவை எதிர்வரும் 11ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments