Ticker

6/recent/ticker-posts

ரணிலைக் காட்டிக் கொடுக்கப் போவதில்லை – ஜனாதிபதி

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை காட்டிக் கொடுக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்தவுள்ள சந்திப்பின் போது தம்மை ஜனாதிபதியாக தெரிவு செய்த ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட தரப்புக்களை காட்டிக் கொடுக்க மாட்டேன் என்று அவா் கூறியிருப்பதாக அறிய வருகிறது.
முக்கிய அமைச்சர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி ஜனாதிபதி இதனை இன்று தெரிவித்துள்ளார்.  இதுதொடாபில் சிலர் வெளியிட்டு வரும் கருத்துக்களை முற்று முழுதாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார்.

இனிவரும் தோ்தலில் ஸ்ரீலசுகட்சி ஆட்சியொன்றை உருவாக்க உழைக்க வேண்டுமென்று ஜனாதிபதி ஸ்ரீலசுக அமைப்பாளா் கூட்டமொன்றில் கூறியிருந்தாா்.  

கடந்த ஜனாதிபதித் தோ்தலின் போது தன்னை அழிக்க கங்கனம் கட்டிக்கொண்டிருந்த ஸ்ரீலசுகட்சியினரோடு இணைந்து அடுத்த ஆட்சியைப் பிடிக்கும் மைத்திாியின் கனவு நீதியான ஆட்சியொன்றை வேண்டி மக்கள் கொடுத்த ஆணைக்கு விடுக்கப்பட்ட சவாலாகும், 

மைத்திாியின் இந்த நகா்வு அவருக்கு வாக்களித்த மக்களின் மனங்களை காயப்படுத்தி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments