ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், விருந்தினர் மாளிகையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். 5 மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற சண்டையைத் தொடர்ந்து தீவிரவாதிகள் 3 பேரை சுட்டுக்கொன்ற ஆப்கான் பாதுகாப்பு படையினர் 50 பிணைக் கைதிகளை பத்திரமாக மீட்டனர்.
காபூலில் உள்ள பார்க் பெலஸ் என்னும் விருந்தினர் மாளிகையில் நேற்றிரவு இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது, துப்பாக்கிகளுடன் வந்த 3 பேர் அடங்கிய குழு தாக்குதல் நடத்தியது. இதில், இரண்டு இந்தியர்கள் உட்பட 14 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதலில் ஏராளமான வெளிநாட்டினரை பிணைக்கைதிகளாக தீவிரவாதிகள் பிடித்து வைத்திருந்தனர். தகவலறிந்த ஆப்கன் பாதுகாப்பு படையினர், மாளிகையை சுற்றி வளைத்து அதிரடி தாக்குதல் நடத்தினர். பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தததில், தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டதாகவும், பிணைக்கைதிகள் 50 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

0 Comments