Ticker

6/recent/ticker-posts

பேஸ் புக்கில் செய்திகளை படிக்க புதிய வசதி

செய்திகளை நேரடியாக அவ்வப்போது தரும் வகையில் பேஸ்புக் நிறுவனம் செய்தித்துறையைச் சேர்ந்த 9 நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை நிறைவேற்றியுள்ளது.

இதன் மூலம் NBC, The Atlantic,  The Guardian, BBC News உள்பட 9 நிறுவனங்களும் தாங்கள் வழங்கவிருக்கும் செய்திகளை பேஸ்புக்கில் நேரடியாகப் பதிவேற்றம் செய்யும். இன்ஸ்டன்ட் ஆர்டிக்கிள்ஸ் என்ற பெயரில் வெளிவரவிருக்கும் இச்செய்திகள் மொபைல் நியூஸ் ஃபீட்ஸ் வழியாக உடனடியாகக் கிடைக்கும். சுமார் 30 சதவிகித அமெரிக்க இளைஞர்கள் இணையதளம் வாயிலாகவே செய்திகளைத் தெரிந்துகொள்கின்றனர் என்ற நிலையில், இந்தப் புதிய முயற்சி அனைவரும் வரவேற்கும் விஷயமாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது. இது குறித்து நேற்று பேஸ்புக் நிறுவனம் தனது வலை தளத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments