சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரையும் விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட் நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டார். கர்நாடக சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ததால் அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதமும் ரத்தாகிறது.
இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய உள்ளீர்களா என்று நீதிபதி குமாரசாமி, கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவை நோக்கி கேட்டார். இதுதொடர்பாக கர்நாடக அரசுடன் கலந்து முடிவு எடுக்கப்படும் என்று ஆச்சார்யா தெரிவித்தார்.
ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுதலையானதும் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டு முன்பும், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகம் முன்பும் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழுங்கியும் கொண்டாடினர்.

0 Comments