Ticker

6/recent/ticker-posts

தலித் பெண்களை ஆடைகள் களைந்து ஊர்வலமாக கொண்டு சென்ற 5 பேர் கைது!

இந்திய உத்தரபிரதேசம் மாநிலத்தில் தலித் பெண்கள் 5 பேர், ஆடைகள் களையப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக போலீசார் 5 பேரை கைது செய்து உள்ளனர். 

உத்தரபிரதேசம் மாநிலம் ஷகாஜாகான்பூர் மாவட்டத்தில் உள்ள ஹாரிவா கிராமத்தில், தலித் சமூகத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர், மற்றுமொரு சமூகத்தை சேர்ந்த பெண்ணுடன் ஊரைவிட்டு ஓடிவிட்டார். இச்சம்பவத்தை அடுத்து குறித்த. பிரிவினர் தலித் வாலிபரின் உறவுக்கார பெண்கள் 5 பேரது ஆடைகளை களைந்து, ஊர்வலமாக இழுத்து சென்றுஉள்ளனர். சுந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் மேல் ஆகியும், இந்தியாவில் இந்த அவலநிலை தொடர்வது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடபாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவத்தில் தொடர்பு உடைய 5 பேரை கைது செய்து உள்ளனர். 
 
இச்சம்பவத்தை அடுத்து கிராமத்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டு உள்ளது. பொலிசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.  

Post a Comment

0 Comments