இறுதிக்கட்டப் போரில், சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் க.வே.பாலகுமாரன், மற்றும் அவரது மகன் உள்ளிட்ட மூவர் இலங்கைப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள புதிய போர்க்குற்ற ஒளிப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
பிபிசி ஊடகவியலாளராகப் பணியாற்றிய, பிரான்சிஸ் ஹரிசன் இந்த போர்க்குற்ற ஒளிப்படத்தை தனது ருவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்தப் படத்தில் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் க.வே.பாலகுமாரன் மற்றும் அவரது மகன் சூரியதீபன் மற்றும் ஒருவர் தரையில் அமர வைக்கப்பட்டுள்ளதும், அவர்கள் முன் இரண்டு சிறிலங்காப் படையினர் நிற்பதும் பதிவாகியுள்ளது.
போரின் இறுதிக்கட்டத்தில் அரச படையினரிடம் தனது மகனுடன் சரணடைந்த க.வே.பாலகுமாரன், அதன் பின்னர் என்னவானார் என்று தெரியவில்லை.
பாலகுமாரன் உள்ளிட்ட மூத்த போராளிகள் எவரும் தம்மிடம் சரணடையவில்லை என்று இலங்கை அரசாங்கம் கைவிரித்திருந்த நிலையில், அவர்கள் சரணடைந்ததை உறுதிப்படுத்தும் மற்றொரு ஆவணம் வெளியாகியிருக்கிறது.


0 Comments