Ticker

6/recent/ticker-posts

பின் லேடன் கொலை : பாகிஸ்தானுக்குத் தெரிந்தே நடந்ததா ?

ஒசாமா பின் லேடன் நான்காண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அமெரிக்க அரசு இது வரை சொல்லிவந்த தகவல்களை, அமெரிக்க புலனாய்வு செய்தியாளரான , செய்மூர் ஹெர்ஷ், கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்.

பின் லேடன் கொல்லப்பட்ட சம்பத்தில் அமெரிக்கா மட்டுமே ஈடுபட்டிருந்தது என்று அமெரிக்கா கூறிவருவதை அவர் மறுத்திருக்கிறார்.
உண்மையில் பாகிஸ்தான ராணுவ மற்றும் உளவுப்பிரிகளுக்கும் ஒசாமா பின் லேடன் வசித்துவந்த அபோட்டாபாத் வளாகத்தின் மீது நடத்தப்பட்ட அமெரிக்கத் தாக்குதல் பற்றிய விவரம் தெரிந்திருந்தது என்று செய்மூர் ஹெர்ஷ் கூறினார்.
சம்பவம் நடந்தபோது, பாகிஸ்தான், இந்தத் தாக்குதலை, பாகிஸ்தானின் இறையாண்மை மீறப்பட்ட ஒரு நடவடிக்கை என்று கண்டனம் செய்திருந்தது.
செய்மூர் ஹெர்ஷின் இந்தக் குற்றச்சாட்டுக்கு உடனடியாக பாகிஸ்தான அல்லது அமெரிக்க அரசுகளிடமிருந்து பதிலேதும் வரவில்லை.
(BBC)

Post a Comment

0 Comments