Ticker

6/recent/ticker-posts

மண்சரிவு அபாயத்தில் புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரி!

தொடர்ந்தும் மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரி அமைந்துள்ள பகுதி மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இடி மின்னல் மற்றும் மழையால் அப்பகுதியில் 25 அடி ஆழமான குழி ஒன்று உருவாகியுள்ளதாகவும்,  இதனால் பாடசாலை கட்டிடத்தில் சிறு சிறு வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் அச்சத்துடனேயே கல்வி கற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலமை தொடர்பில் கிராம சேவகர் ஊடாக உடபளாத்த பிரதேச செயலாளருக்கும் அனர்த்த முகாமைத்து நிலையத்திற்கும் அறிவிக்கப்பட்டு பரிசோதனைகள் இடம்பெறுகின்றன.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கான உரிய தீர்வினை பெற்றுத் தருமாறு பாடசாலை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Post a Comment

0 Comments