Ticker

6/recent/ticker-posts

ஞானசார தேரருக்கு பிடியாணை! கைது செய்யு மாறு நீதிமன்றம் உத்தரவு!

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்யுமாறு  கொழும்பு பிரதான நீதவான் ஜிஹான் பிலப்பிட்டியவினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊழல் மோசடி  குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முன்னால் கடந்த 23ம் திகதி நீதி மன்ற தடையுத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை இன்று நீதி மன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் ஞானசார தேரர்  ஆஜராகாத காரணத்தினாலே அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments