வில்பத்து சரணாலயத்தை அழித்து குடியேற்றங்களை மேற்கொண்டதாகவும் இதன் மூலம் இனவாதத்தை உருவாக்கி அமைதியின்மையை ஏற் படுத்துவதற்கு அமைச்சர் றிஷாத்பதியுதீன் முற்படுவதாக பொதுபல சேனா குற்றம் சுமத்தியுள்ளது.
குறித்த வனப்பகுதியை அழித்து முஸ்லிம்களுக்கு தனி கிராமத்தை அமைத்துள்ளதாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் மீது பொதுபலசேனா குற்றம் சுமத்தியுள்ளது.
எனினும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் இந்த குற்றச்சாட்டை அண்மையில் கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி மறுப்பு தெரிவித்திருந்தார்.
மேலும் தம்மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், தாம் அமைச்சர் பதவியில் இருந்தும் விலகுவதாக கூறியிருந்தார்.
எனினும் பொதுபலசேனா மற்றும் சிங்கள ராவய போன்ற அமைப்புகள், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைக்கின்றன.
இந்த பிரச்சினையில் இருந்து தப்பிக் கொள்வதற்காக அமைச்சர் றிசாட் பதியுதீன் இனவாதத்தை முன்னிலைப்படுத்துவதாக அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் சிங்கள ராவய அமைப்பு காவற்துறை மா அதிபரிடம் நேற்று மனு ஒன்றை கையளித்துள்ளது.

0 Comments