Ticker

6/recent/ticker-posts

நேபாளம், இந்தியாவில் மீண்டும் நிலநடுக்கம், சென்னையிலும் உணரப்பட்டுள்ளது

நேபாளத்தில் மீண்டும் 7.4 ரிக்டர் அளவுகொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என்று வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவித்து உள்ளது. 

நிலநடுக்கமானது காத்மண்டு நகரை கொண்டு ஏற்பட்டு உள்ளது என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவித்து உள்ளன. புதுடெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலஅதிர்வு உணரப்பட்டு உள்ளது. நிலஅதிர்வை அடுத்து டெல்லியில் மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. மேற்கு வங்காளம், பீகார் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். சென்னையிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. நந்தனம், நெல்சன் மாணிக்கம் சாலை மற்றும் கோடம்பாக்கம் ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. 
இந்திய வடமாநிலங்களில் நிலநடுக்கத்தை அடுத்து வீடுகளை விட்டு மக்கள் வெளியேறினர். கடந்த 25-ம் தேதி நேபாளத்தை மையமாக கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் இந்தியாவிலும் பாதிப்பு ஏற்பட்டது. நிலநடுக்கத்திற்கு நேபாளம் நாட்டில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகினர். இந்தியாவில் பீகார் மாநிலத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது பெரிதும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Post a Comment

0 Comments