Ticker

6/recent/ticker-posts

மைத்திரியின் கூட்டத்திற்கு நான் தான் அந்த நபரை அனுப்பினேன் - மஹிந்த ராஜபக்ஷ

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்ட கூட்டத்தில் தனது மகன் நாமல் ராஜபக்ஷவுடன் துப்பாக்கியுடன் வந்ததாக கூறப்படும் இராணுவ வீரர் ஒருவர் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்
 
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குறித்த இராணுவ கோப்ரல் தனது பாதுகாப்புக்காகவே கடமை புரிகிறார். அவரை நான் எனது மகனான நாமலின் பாதுகாப்புக்காக செல்லுமாறு கூறியதற்காகவே அவர் எனது மகனுடன் ஹம்பாந்தோட்டை கூட்டத்துக்குச் சென்றிருந்தார்.
கூட்ட அரங்கிற்கு எனது மகன் சென்ற போது இராணுவ கோப்ரால் சேனக குமாரகேவும் அவருடன் சென்றார். இதன் போதே பொலிஸார் அவரை மறித்து விசாரணை செய்தனர்.  பின்னர் அவரை திருபு்பி அனுப்பியிருந்தனர். இதுவே நடந்த சம்பவம்.
 
இதனை விடுத்து ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவுக்கு எதிராக சூழ்ச்சி செய்ததாக கூறி  அந்த இராணுவ வீரரை பின்னர் கைது செய்ததுடன் நாமலின் பெயரையும் இணைத்து குற்றம் சாட்டியுள்ளமை உண்மைக்கு மாறான விடயம்.எனது குடும்பத்துக்கு மாசு கற்பிக்கவே இவ்வாறெல்லாம்  இடம்பெறுகிறது என்றும் அவர்  விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments