Ticker

6/recent/ticker-posts

டிவிட்டரில் இணைந்தார் ஒபாமா!

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவை டிவிட்டரில் இனி அதிகாரப்பூர்வமாக பின் தொடர்லாம். ஒபாமா, அமெரிக்க அதிபராக சொந்த டிவிட்டர் கணக்கை துவக்கியிருக்கிறார். அமெரிக்க அதிபர் என்பதை குறிக்கும் @POTUS (President Of The United States)  கணக்கு மூலம் அவர் டிவிட்டரில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

அதிபர் ஒபாமா டிவிட்டருக்கு புதியவரல்லதான். அவரது பெயரில் ஏற்கனவே டிவிட்டர் பக்கம் இருக்கிறது. @BarackObama எனும் அந்த டிவிட்டர் பக்கம் 2007 ம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது அந்த பக்கத்தை பயன்படுத்தி வந்த ஒபாமா, அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அந்த பக்கத்தை தனது பணியாளர்களிடம் ஒப்படைத்து விட்டார். 'ஆர்கனைசிங் பார் ஆக்‌ஷன் ஸ்டாப் ' எனும் அமைப்பு அந்த பக்கத்தை கவனித்து வருகிறது. 
அதில் அதிபர் ஒபாமாவின் நேரடி குறும்பதிவுகள் வெளியாகும்போது, ஒபாமாவின் முதல் இரண்டு எழுத்துக்களோடு வெளியாகும். இந்த டிவிட்டர் பக்கத்திற்கு 59.3 மில்லியன் பாலோவர்கள் உள்ளனர். இதன் மூலமே டிவிட்டரில் அதிகம் பின் தொடரப்படும் தலைவராக ஒபாமா அறியப்படுகிறார்.
இது தவிர அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை பெயரில் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கமும் இருக்கிறது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா அமெரிக்க அதிபர் என்பதை குறிக்கும் @POTUS (President Of The United States)  கணக்கு மூலம் அவர் டிவிட்டரில் அதிகாரப்பூர்வ பக்கத்தை துவக்கியிருக்கிறார்.

இந்த கணக்கு மூலம் வெளியிட்டுள்ள முதல் குறும்பதிவில் ஒபாமா, ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தனக்கென தனி டிவிட்டர் பக்கத்தை அனுமதித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். தந்தை,  கணவர், அமெரிக்காவின் 44 வது அதிபர் என இந்த டிவிட்டர் பக்கத்தின் பயோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பக்கம் மூலம் ஒபாமா அதிபராக நேரடியாக குறும்பதிவுகளை வெளியிட உள்ளார். அமெரிக்க மக்களுடன் நேரடியாக அதிபர் தொடர்பு கொள்ள இந்த டிவிட்டர் பக்கம் புதிய வழியாக இருக்கும் என்று வெள்ளை மாளிகை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பக்கம் துவக்கப்பட்ட சில மணி நேரங்களில் எல்லாம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்கள் குவிந்துள்ளனர்.

முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டன், ஜோர்ஜ் புஷ் உள்ளிட்டோரை ஒபாமா டிவிட்டரில் பின் தொடர்கிறார். அவரது மனைவியின் டிவிட்டர் பக்கத்தையும் பின் தொடர்கிறார்.

அதிபர் ஒபாமாவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் https://twitter.com/POTUS

Post a Comment

0 Comments