Ticker

6/recent/ticker-posts

பிரிட்டனில் மேயராக பொறுப்பேற்றுள்ள ஆசிய கண்டத்தை சேர்ந்த முதல் பெண்மணி

பிரிட்டனில் இந்தியாவைச் சேர்ந்த பெண் ஹர்பஜன் கவுர் தீர் என்பவர் மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
1953-ம் ஆண்டு பஞ்சாபில் பிறந்த ஹர்பஜன் கவுர் தீர் (62), 1975-ம் ஆண்டு பிரிட்டனுக்கு குடிபெயர்ந்துள்ளார்.
அரசியலில் ஆர்வம் காட்டிய கவுர் தொழிலாளர் கட்சியில் இணைந்தார்.
பிரிட்டனுக்கு வரும் வெளிநாட்டுப் பெண்களுக்கு ஆங்கிலம் பெரும் பிரச்சினையாக இருப்பதை உணர்ந்த கவுர், அவர்களுக்கு வீடுகளுக்கே சென்று ஆங்கிலம் கற்பித்தார், பள்ளி தாளாளராகவும் பணியாற்றியுள்ளார்.

குழந்தைகள் உரிமைக்காக பல சட்ட போராட் டங்களையும் நடத்தியுள்ளார்.
இந்நிலையில், ஹர்பஜன் கவுர் தீர் நகராட்சி மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதன்மூலம் பிரிட்டனில் இப்பொறுப்பை ஏற்கும் ஆசிய கண்டத்தை சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
லண்டனின் புறநகர் பகுதியான ஏலிங் கவுன்சில் (நகராட்சி) மேயராக நேற்று முன்தினம் விக்டோரியா ஹாலில் நடந்த நிகழ்ச்சியில், ஹர்பஜன் கவுர் தீர் பதவியேற்றுள்ளார்.
இது தொடர்பாக கவுர் கூறுகையில், இப்பதவி எனக்கு கிடைத்த கௌரவம். அதே நேரத்தில் இது சவால்மிக்க பணி.
எனினும் அதனை நினைத்து மலைப்படையவில்லை என்றும், எனது கணவர் உடனிருக்கும் போது என்னால் எவரெஸ்ட் சிகரத்தில் கூட ஏற முடியும் எனவும் கூறியுள்ளார்.
மேலும், கவுரின் கணவர் ரஞ்சித் தீர் ஏலிங் கவுன்சிலின் மேயராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments