நேபாளம், சீனா, ஆப்கானிஸ்தான், இந்தோனேஷியா மற்றும் இந்தியாவின் டெல்லி, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இன்று அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். நேபாளத்தில் நிலநடுக்கத்திற்கு 7 பேர் பலியாகி உள்ளனர்.
நேபாளம், ஆப்கானிஸ்தான்
நேபாளம் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தோனேஷியாவில் இன்று நிலநடுக்கம் நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது.
நேபாள தலைநகர் காத்மாண்டுவிலிருந்து 83 கி.மீ. தொலைவில், சீன எல்லையையொட்டி உள்ள இடத்தை மையமாக கொண்டு நிகழ்ந்த இந்த நிலநடுக்கம் அடுத்தடுத்து 6 முறை நிகழ்ந்ததால்,கட்டடங்கள் இடிந்து விழுந்தன. மக்கள் பீதியடைந்து திறந்த வெளி இடங்களில் குவிந்தனர்.
7 பேர் பலி
இந்நிலையில் நேபாளத்தில் இன்றைய நிலநடுக்கத்திற்கு இதுவரை 6 பேர் பலியாகி உள்ளதாகவும், 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்துடன் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா
இதேபோல் சீனாவிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது.
மேலும், ஆப்கானிஸ்தானில் 4.7 ஆகவும், இந்தோனேஷியாவில் 5.1 ஆகவும் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்தோனேஷியா
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஆப்கானிஸ்தான், இந்தோனேஷியா மற்றும் இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது.
டெல்லி, பீகார், உத்தரபிரதேசம், மேற்குவங்கம்
டெல்லி, பீகார், உத்தரபிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வீடுகள் கட்டடங்கள் குலுங்கியதால் காலை நேரத்தில் அலுவலகங்களில் வேலை செய்து கொண்டிந்தவர்களும், வீடுகளில் இருந்தவர்களும் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம்
நிலநடுக்கத்தால் டெல்லியில் உடனடியாக மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
நிலநடுக்கத்தால் டெல்லியில் உடனடியாக மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
பீகாரில் 2 பேர் பலி
இதனிடையே நிலநடுக்கத்திற்கு பீகாரில் 2 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொபைல் போன் சேவைகள் செயலிழப்பு
மேலும் டெல்லியில் மொபைல் போன் சேவைகளும் செயலிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளா
இந்நிலையில் கேரளாவிலும், குறிப்பாக கொச்சியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை
இதனிடையே சென்னையிலும் பெசன்ட் நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட சில இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், இதனால் மக்கள் பீதியடைந்து வீட்டைவிட்டு வெளியே ஓடி வந்தனர்.
82 இடங்கள்
உலகம் முழுவதும் 82 இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 7 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
www.vikatan.com
0 Comments