இலங்கையில் நல்லாட்சியொன்று ஏற்பட்டிருக்கும் நிலையில் ஒரு பகுதிமக்கள் அகதி வாழ்வு வாழ்வது நட்டுக்கு அழகல்ல எனவே வடக்கிலிருந்து 1990 ஆம் ஆண்டுகளில் பலவந்தமாக வெ ளியேற்றப்பட்ட மக்களை சொந்த இடங்களில் மீள்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்கவேண்டும்
மாளிகாவத்தையிலுள்ள மத்திய கொழும்பின் ஐக்கிய தேசிய கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலான கலந்துறையாடலில் மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வில்பத்து பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து அரசு ரவி கருணாநாயக்க தலைமையிலான அமைச்சரவை குழுவொன்றை இவ்விவகாரம் குறித்தை கையாள நியமித்ததை வரவேற்கிறேன். எனினும் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களை முழுமையாக மீள்குடியமர்த்துவதற்கான விஷேட ஆணைக்குழுவொன்றை நியமித்து அதனூடாக நடவடிக்கைகளை துரிதப்படுத்தவேண்டும் எனவும் முஜிபுர் ரஹ்மான் வேண்டுகோள் விடுத்தார்.
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்றும் புத்தளம் உள்ளட்ட பல பிரதேசங்களிலும் முகாம் வாழ்க்கை வாழ்கின்றனர். அவர்களுக்கான அடிப்படை தேவைகள் கூட நிவர்த்தி செய்துகொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றது. உள்நாட்டில் இன சுத்திகரிப்பின் பேரில் வெளியேற்றப்பட்டு 25 வருடங்களாக அகதி வாழ்வு வாழும் நிலைமையை சீர்செய்ய முடியாமல் இருப்பதையிட்டு வெட்கப்பட வேண்டியிருக்கிறது.
இலங்கையில் உள்நாட்டு மோதல்கள் முடிவடைந்து 6 வருடங்கள் நிறைவடைந்துவிட்டது. நாட்டில் மீண்டுமொரு முறுகல் நிலைமை தோன்றாமல் இருப்பதற்கு பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் பூர்த்திசெய்யவேண்டியுள்ளது. ஆனால் வடக்கில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் எவ்விதாமான கரிசனைகளும் காட்டப்படாமை வறுத்தமளிக்கிறது. அத்துடன் வடக்கில் அரசின் பிரதிநிதிகளாக இருந்த முஸ்லிம் அரசியல்வாதிகளினால் இந்த பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை இதுவரை தயாரிக்க முடியாமல் இருப்பதையிட்டு வெட்கப்படுகிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இடம்பெயர்ந்த மக்களை வைத்து அரசியல் நடத்துவதனால் மக்கள் தொடர்ந்தும் ஆதாளபாதாளத்துக்கே தள்ளப்படுகின்றனர். இதற்கான தீர்வுத்திட்டமொன்றை அவர்களால் தொடர்ந்தும் வகுக்க முடியாதுள்ளது.
எனவேதான் கடந்த காலங்களில் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. தமது சுயஇலாப அரசியல் நடவடிக்கைகளை மையப்படுத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும்போது பல சிக்கல்கள் ஏற்படும்.
2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தலின்போது மீள்குடியேற்றத்தை சாத்தியப்படுத்துவதாக கூறி வடக்கு முஸ்லிம்களின் வாக்குகளை மஹிந்த ராஜபக்ஷவிற்கு தாரைவாா்த்தனர். ஆனால் குறிப்பிட்வர்களின் அரசியல் சாணக்கியத்தினால் மக்களால் எதனையும் சாதிக்க முடியவில்லை. ஆனால் அரசியல்வாதிகள் இன்று கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர் என்று முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டினார்.
இப்போது தமது சகாக்களுக்கு தேவையாக வேலைவாய்ப்புகளையும் அரசு நலன்களையும் அனுபவிப்பதிலேயே கருத்தாக இருக்கின்றனர்களே தவிர மக்களின் மீள்குடியேற்றத்திற்கான விஷேட திட்டமொன்றை வைத்து மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவதற்கான எந்த நடவடிக்கையையும் காண முடிவதில்லை.
இன்று புதிய அரசாங்கம் வில்பத்து விவகாரத்தை கையாள்வதற்கு அமைச்சரவை குழுவொன்றை நியமித்துள்ளது. இந்த குழுவினூடாக வட பகுதியில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை சாத்தியப்படுத்துவதற்கான அடிப்படை திட்டமொன்றை உருவாக்கவேண்டும் எனவும் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன் வடக்கு பகுதிகளுக்கு நாம் விஜயம் செய்த போது அம்மக்கள் அடிப்படை வசதிகளின்றி வாழ்வதை அவதானித்தோம். அவர்களின் மீள்குடியேற்றத்தின்போது மீள்குடியேற்றகொள்கை முழுமையாக பின்பற்றப்பட வேண்டும்.
வீட்டு வசதி, மலசலகூட வசதி அனைவருக்கும் செய்துகொடுக்கப்பட வேண்டும். அத்துடன் முஸ்லிம் பிரதேசங்கள் நீண்டகாலமாக அவர்களின் சொந்த இடங்களில் குடிநீர் திட்டங்கள் இல்லாமல் அவதியுறுகின்றனர். பிரதேசத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும் எனவும் மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டினார்.

0 Comments