Ticker

6/recent/ticker-posts

ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க புதிய திட்டத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா

ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளை சமாளிக்க அன்பார் மாகாணத்தில் புதிய ராணுவ தளத்தை அமைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
மேலும் 400 வீரர்களை அனுப்பி வைத்து ஈராக் ராணுவத்தினருக்கு பயிற்சி அளித்து ரமதி நகரை தீவிரவாதிகளிடம் இருந்து மீட்கவும் ஒபாமா அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த திட்டத்திற்கு இன்னும் வெள்ளை மாளிகை ஒப்புதல் அளிக்கவில்லை.
புதிய ராணுவ தளத்தை அமைக்க விரும்பும் அன்பார் மாகாணத்தில் சன்னி முஸ்லீம்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் ஐஎஸ் தீவிரவாதிகளை எதிர்த்து போராடும் அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அன்பாரின் தலைநகரான ரமதி பாக்தாத் அருகே உள்ளது.
ரமதி நகரை மீட்க வேண்டும் எனில் அன்பாரில் உள்ள பயிற்சி பெற்ற ஈராக் பழங்குடியினத்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 500ல் இருந்து 10 ஆயிரமாக அதிகரிக்கப்பட வேண்டும். ரமதியை மீட்க ஈராக் ராணுவத்தில் 3 ஆயிரம் பேரை புதிதாக சேர்க்க உள்ளனர்.
ஈராக் ராணுவத்திற்கு பயிற்சி அளிக்க அமெரிக்கா தவிர்த்து இங்கிலாந்தும் கூடுதல் படைகளை அனுப்பி வைக்க உள்ளது. 125 கூடுதல் படைகளை ஈராக்கிற்கு அனுப்பி வைப்பதாக இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments