ராமர் கோவில் தற்போதைய பாஜக ஆட்சியிலேயே கட்டப்படும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாக்சி மகராஜ் தெரிவித்திருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், பாஜகவின் நோக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும், இந்த ஆட்சியின் போதே ராமர் கோவில் கண்டிப்பாக கட்டப்படும் என்றும் கூறியுள்ளார்.
இன்றோ அல்லது நாளையோ கண்டிப்பாக எப்படியாவது ஐந்தாண்டிற்குள் ராமர் கோவில் கட்டப்படும் என தெரிவித்துள்ள சாக்சி மகராஜ் அதற்காக பாஜகவிற்கு இன்னும் 4 ஆண்டுகாலம் உள்ளதாக கூறியுள்ளார்.
அயோத்தில் சர்ச்சைகுரிய பகுதியில் பாபரின் பெயரில் ஒரு கல்லை கூட எடுத்து வைக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்றும் சாக்சி மகராஜ் தெரிவித்துள்ளார்.

0 Comments