எதிர்வரும் 28ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு அண்மித்த நாட்களிலோ கடலலையின் உயரம் ஓரளவுக்கு அதிகரித்து இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
பூமியை சுற்றி நீள்வட்டபாதையில் சந்திரன் பயணிக்கும் போது செப்டெம்பர் 28ஆம் திகதியன்று பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம் மிகக்குறுகியதாக இருக்கும் என்றும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது.
பௌர்ணமி தினமான ஞாயிற்றுக்கிழமை (27) பூரண சந்திரக்கிரகணம் நிலவுவதால் சிவந்த நிறத்திலான நிலவை காணக்கூடியதாக இருக்கும் என்றும் இதற்கு ‘ஞாயிறு ரெட் மூன்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments