Ticker

6/recent/ticker-posts

தாஜுதீனின் கொலையாளிகள் நால்வர் கண்டுபிடிப்பு ! மூவர் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர்கள்!

ரகர் வீரர் வஸீம் தாஜுதீனை கொலை செய்தவர்களில் மூவர் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவை சேர்ந்தவர்கள் என்று குற்றப் புலனாய்வு துறையினர் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து அறிய வந்துள்ளதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன.


இக்கொலையில் சம்பந்தப்பட்ட மற்றவர் தற்போது லண்டனில் வசிப்பதாகவும், அரசியல்வாதி ஒருவரின் உதவியின் மூலம் இவர் வெளிநாடு சென்றிருப்பதாகவும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருக்கிறது. இதேவேளை கொலையாளிகள் இத்தாலிக்கு தப்பியோடியதாக வந்த செய்தியில் உண்மையில்லையென்றும் அறிய வருகிறது.

தாஜுதீனின் கொலை தொடர்பான அறிக்கை எதிர்வரும் 10ம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அறிய வருகிறது.

Post a Comment

0 Comments