வாழ்வின் விடியலை நோக்கி, தம் சொந்த நாடான சிரியாவிலிருந்து கடல் மார்க்கமாக ஐரோப்பாவை அடைய முயற்சித்தவர்களில் 12 பேர் நீரில் மூழ்கி இறந்த சம்பவம், சர்வதேச நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக வெளியான வீடியோவில், கரை ஒதுங்கிக் கிடக்கும் மூன்று வயது சிறுவனின் உடல், பார்ப்பவர்களை பதைபதைக்கச் செய்கிறது.
சிரியாவில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக, ஆயிரக்கணக்கானோர் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புக, கடல் மார்க்கமாக பாதுகாப்பற்ற பயணம் மேற்கொள்கின்றனர். அப்படி துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டுக்கு 23 பேர், 2 படகுகளில் பயணம் மேற்கொண்டனர். அப்போது படகு கவிழ்ந்ததில் 12 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். இதில் 5 பேர் பச்சிளம் குழந்தைகள். இந்த விபத்தில் இருந்து 9 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர்.
அதில் ஒருவன்தான் மூன்று வயதே ஆனஅய்லன் குர்தி . அவனோடு சேர்ந்து அவன் தாயும், காலிப் குர்தி 5 வயது அண்ணனும் நீரில் மூழ்கி இறந்தனர்.
முன்னரே இது போன்ற சம்பவங்கள் பல நிகழ்ந்திருந்தும் கூட, அகதிகளை ஏற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டாமல் பிடியை இறுக்கியபடியே இருக்கின்றன ஐரோப்பிய நாடுகள். "இனியும் கண்டும் காணாமல் இருப்பது மனிதத்தன்மை அல்ல!” என்கிறது ‘தி இண்டிபென்டென்ட்’ பத்திரிகை.
vikatan.com
சிரியாவில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக, ஆயிரக்கணக்கானோர் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புக, கடல் மார்க்கமாக பாதுகாப்பற்ற பயணம் மேற்கொள்கின்றனர். அப்படி துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டுக்கு 23 பேர், 2 படகுகளில் பயணம் மேற்கொண்டனர். அப்போது படகு கவிழ்ந்ததில் 12 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். இதில் 5 பேர் பச்சிளம் குழந்தைகள். இந்த விபத்தில் இருந்து 9 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர். அதில் ஒருவன்தான் மூன்று வயதே ஆனஅய்லன் குர்தி . அவனோடு சேர்ந்து அவன் தாயும், காலிப் குர்தி 5 வயது அண்ணனும் நீரில் மூழ்கி இறந்தனர்.
முன்னரே இது போன்ற சம்பவங்கள் பல நிகழ்ந்திருந்தும் கூட, அகதிகளை ஏற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டாமல் பிடியை இறுக்கியபடியே இருக்கின்றன ஐரோப்பிய நாடுகள். "இனியும் கண்டும் காணாமல் இருப்பது மனிதத்தன்மை அல்ல!” என்கிறது ‘தி இண்டிபென்டென்ட்’ பத்திரிகை.
vikatan.com


0 Comments