Ticker

6/recent/ticker-posts

இலங்கையின் கனிய வளங்களில் அதிக அன்னியச் செலாவணியை ஈட்டித்தரும் கனியம் இரத்தினக்கற்கள் - அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

இரத்தினக்கற்;களுக்கு வரலாற்று ரீதியாக உலகளவில் மவுசு இருந்து வருகிறது!

இலங்கையின் கனிய வளங்களில் அதிக அன்னியச் செலாவணியை ஈட்டித்தரும்  கனியம் இரத்தினக்கற்கள் ஆகும். தற்போது இலங்கை இரத்தினக்கல் ஏற்றுமதியினை ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களினை ஈட்டுவதற்கான இலக்கினை கொண்டுள்ளது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

3ம் திகதி  காலை பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகர்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இரத்தினக் கற்கள் ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிக்கும் குயுஊநுவுளு 2015 – 25 ஆவது  சர்வதேச வருடாந்த இரத்தினகற்கள் மற்றும் தங்க ஆபரண  கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில்  கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ரிஷாட் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் தொடர்ந்து அங்கு கருத்து தெரிவிக்கையில்: இலங்கையின் மொத்த இரத்தினக்கற்களின் ஏற்றுமதி 2010 ஆம் ஆண்டில் 70 மில்லியன் அமெரிக்க டொலர் இருந்தது. கடந்த வருடம் அவ் ஏற்றுமதி 135மூ சத வீதமாக அதிகரித்து காணப்பட்டது.  இந்த 135மூ சத வீத உச்ச அதிகரிப்பு அடுத்த கட்டத்திற்;கான  சர்வதேச இடைப்பட்ட இரத்தினக்கற்களுக்கான நம்பிக்கைக்குரிய சந்தை ஊடாக நாட்டின் இரத்தினக்கற்கள் துறையினை எட்டுவதற்கு உதவ முடியும்.   

மேலும் இத் தொழில்துறையின்  இடைப்பட்ட மற்றும்  உயர்மட்ட நுகர்வோர் மீதான அதிக கவனத்தினை விரிவுப்படுத்துவதற்கான  நேரம் தற்போது வந்துவிட்டது  என்று நான் நம்புகிறேன்.   உலக இடைப்பட்ட நுகர்வோர்; ஒரு மிக பெரிய சந்தையாகும்.

இலங்கையின் ஒரேயொரு இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணக் கண்காட்சியான குயுஊநுவுளு 2015, 6ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.   ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் அனுசரனையுடன் நடைபெறும் இந்த நிகழ்வுக்கு இணையாக ‘இலங்கை தங்க ஆபரண வடிவமைப்பு’ போட்டியும் நடைபெறும். 

இத் தொடர் சர்வதேச கண்காட்சியானது  தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபை  மற்றும் இலங்கை இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அமைப்பினரால் இணைந்து ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மூலம் 1991ஆம் ஆண்டில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இலங்கையில் வரலாற்று புகழ்மிக்க வண்ண இரத்தினகற்கள் மற்றும் தங்க ஆபரண துறையினை முன்னிலைப்படுத்த இத் தொடர் சர்வதேச கண்காட்சி முதன்மையான கண்காட்சியாக இன்று மாறியுள்ளது.

இக்கண்காட்சியானது ஏற்றுமதி மீது நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துவதனால்,   இக்கண்காட்சியினை தொடர்ந்து ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதை அனைவரும் அறிந்துள்ளனர்.
 
1991ம் ஆண்டு;  ஆரம்பிக்கப்பட்ட குயுஊநுவுளு  கண்காட்சி, இன்று  ஏற்றுமதியை அதிகரிப்பதில் பங்களிக்கும் மிகப்பெரும் காரணிகளில் ஒன்றாக விளங்குகின்றது.

வெற்றிகரமாக 25 வருடங்களாக இடம்பெற்று வரும் இந்த பாரிய   கண்காட்சியின் மூலம் ஏற்றுமதிக்கான பல அரிய வாய்ப்புகளை எதிர்நோக்கி, அதனூடாக 2015ம் ஆண்டளவில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கினை எட்டுவோம் என்ற எதிர்பார்ப்பினையும் கொண்டுள்ளோம் என்றும்  அமைச்சர் தெரிவித்தார். 
 
சர்வதேச வர்த்தகர்களை ஈர்க்கும் முகமாக கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்தக் கண்காட்சியில் உள்ளூர் மற்றும் சர்வதேச இரத்தின ஆபரண வர்த்தகர்கள் பெருமளவில் கலந்துகொள்வார்கள்.

இக்கண்காட்சியினை கண்டுகழிக்க அனைத்து தொழில்துறையைச் சேர்ந்த  10 ஆயிரம்  உள்ளூர் மற்றம் வெளியூர் பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் கலந்துக்கொள்வார்கள் என  எதிர்பார்க்கப்படுகிறது. இது எமது நாட்டின ;இரத்தினக்கற்கள் மற்றும்; தங்க ஆபரண துறையின் வளர்ச்சிக்கு ஒர் உந்துசக்தியாக அமையும் என நான் நம்புகின்றேன்.

இக்கண்காட்சி திட்டமிட்டதிலிருந்து தொடர்ந்து நடைபெற்று வருகின்ற அதே நேரத்தில் உலக  இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் மீதான  கேள்வி 2020 ஆம் ஆண்டு  வரை 6மூ சத வீத வருடாந்த விகிதத்தில் அதிகரித்து இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது

இலங்கையில் இரத்தினக்கற்கள்; உற்பத்தி நன்கு அறியப்பட்ட ஏற்றுமதி மட்டுமல்ல அது உலக வர்த்தக பண்டைய வரலாற்றிலும் ஒரு முக்கிய அடையாளமாக  இருந்து வருகின்றது என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. 

இலங்கையின் இரத்தினக் கற்களுக்கு சர்வதேச அளவில் நல்ல சந்தை வாய்ப்பு இருந்து வருகின்றது. அதிகளவாக ஹொங்கொன்ங், அமெரிக்கா, தாய்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதேவேளை, சீனா, ரஷ்;யா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் புதிய சந்தை வாய்ப்பையேற்படுத்த விருப்பம் கொண்டுள்ளன.

ஒரு காலத்தில், அமெரிக்கா, ஐரோப்பா போன்ற சந்தைகளுடன் ஜப்பான் சந்தைகளிலும் இலங்கை இரத்தினக்கற்களுக்கு பெரும் கிராக்கி இருந்தள்ளது. இலங்கை, பர்மா மற்றும் காஷ்மீர் இரத்தினக்கற்களுக்கே உலகளாவிய ரீதியில் பெரும் கிராக்கி இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இத்துறையில் இது வரைக்கும் சுமார் 7 இலட்சம் பேர்வரை ஈடுபட்டுள்ளனர். இத்துறையினை மேலும் விரிவுபடுத்தி, அதற்கு தேவையான வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கும் எமது கைத்தொழில் துறை அமைச்சு தயாராக இருக்கின்றது.
இரத்தினக்கல் தொழிற்துறையில் உலகில் இலங்கைக்கென்று தனிப் பெருமை இருக்கின்றது. இலங்கைக்கே சிறப்பான நீலக்கல் இரத்தினங்களுக்கு வரலாற்று ரீதியாக உலகளவில் மவுசு இருந்து வருகிறது. இலங்கையில் வரலாற்று ரீதியாக இரத்தினக்கல் ,தங்கம் மற்றும் ஆபரணப் பொருட்களில் முதலீடு செய்யும் ஆர்வம் முதலீட்டாளர்கள் மத்தியில் இன்றும் அதிகரித்துவருகின்றது என்றும் அமைச்சர் ரிஷாட் சுட்டிக்காட்டினார்.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹர்ஷ டி சில்வா, கபீர் ஹாசிம் மற்றும் இரான் விக்கிரமரட்ன, அத்துடன் குயுஊநுவுளு குழு தலைவர் செல்லக்குமார் கந்தசாமி, மற்றும் இலங்கைக்கான  FACETS   இன் தலைவர் ஜுஸார் அடமலி உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
 

Post a Comment

0 Comments