Ticker

6/recent/ticker-posts

அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் யோசனையை ஜே.வி.பி எதிர்க்கும்!

அமைச்சர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதனை எதிர்ப்பதாக ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்தின் அமைச்சர் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதனை எதிர்த்து இன்று நாடாளுமன்றில் வாக்களிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இன்று நாடாளுமன்றில், அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்த யோசனையை விவாதத்திற்காக முன்வைக்கப்பட உள்ளது. அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்களின் எண்ணிக்கை 30ற்கு மேற்படாலும், ராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை 40ற்கு மேற்படாலும் இருக்க வேண்டும். அதனை விடவும் அதிகளவு அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் ராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டால் ஜே.வி.பி அதனை எதிர்க்கும்.
அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குதல், மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் வீழ்ச்சியடைவதற்கான ஓர் காரணமாகும். அவ்வாறான இழிவான கலாசாரத்தை முன்னெடுத்த ராஜபக்ச அரசாங்கத்தை நாம் தோற்கடித்தோம்.தற்போதைய அரசாங்கமும் அதே வழியில் சென்று அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள முயற்சித்தால், அதற்கு எதிராகவும் குரல் கொடுக்க நேரிடும் என அனுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
LankaSee

Post a Comment

0 Comments