Ticker

6/recent/ticker-posts

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முஹம்மது : மெஸெஞ்சர் ஆஃப் காட். படத்திற்கு தடை?

மஜித் மஜிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் முஹம்மது  நபிகளின் வாழ்க்கை வரலாற்று படமாக கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி வெளியான ஈரானியப் படம் முஹம்மது : மெஸெஞ்சர் ஆஃப் காட்.  
இந்தப் படம் இஸ்லாமிய மதத்துக்கு எதிரான படம் எனவும் இந்த படத்திற்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் எனவும் மும்பையைச் சேர்ந்த ராஸா  அமைப்பு படத்திற்கும், படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இயக்குநர் மஜித் மஜிதிக்கு எதிராக பத்வா வழங்கியுள்ளது.

முதன்முதலாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான ஈரானியப் படமான இப்படம் இஸ்லாமிய மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிராக உள்ளதாகவும், படத்தை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸூக்கு மேற்படி அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

Post a Comment

0 Comments