இலங்கையில் ஆளுக்கொரு நீதி..?
'' கிணற்றிலுள்ள நீரை அருந்தாதீர்கள்.''
''இந்த நச்சுக்காற்றை சுவாசிக்காதீர்கள். ''
''உடனடியாக வெளியேறி ஆறு மைல்களுக்கு அப்பால் சென்று விடுங்கள். ''
''வெடித்த மற்றும் விழுந்துள்ள பொருட்களை தொடாதீர்கள். அப்படி ஏதும் இருந்தால் இராணுவ தலைமையகத்தோடு தொலைபேசியில் உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்.''
கொஸ்கம இராணுவ முகாமின் ஆயுத களஞ்சியம் தீப்பிடித்த போது மக்களுக்கு இராணுவம் இப்படிதான் வேண்டுகோள் விடுத்தது.
கடந்த 30 ஆண்டு கால யுத்தத்தில் வடக்கு கிழக்கு மக்களுக்கு இப்படியான ஒரு அறிவித்தலை இராணுவம் அறிவிக்கவில்லையே.
காரணம் அவர்கள் சிங்களவர்களாக இல்லாமல் தமிழர்களாக இருந்ததே!
காரணம் அவர்கள் சிங்களவர்களாக இல்லாமல் தமிழர்களாக இருந்ததே!
அதுதவிர யுத்தத்தில் பாவிக்கப்பட்ட குண்டுகளில் இத்தகைய நச்சுத்தன்மை நிரம்பியிருந்ததை தெற்கு மக்கள் சாலாவ கொஸ்கம ஆயுதக் களஞ்சியம் அழிந்தபோதுதான் தெரிந்து கொண்டார்கள்.
சகல ஜீவராசிகளும் நலமாய் வாழ வேண்டுமென்பதுதான் புத்தரின் போதனை.
ஸ்ரீலங்காவிலோ சிங்கள ஜீவராசிகள் மட்டும் நலமாய் வாழவேண்டும் என்று புத்தரின் போதனையை திரிபு படுத்திக் கொண்டுள்ளார்கள்.
Azeez Nizardeen
0 Comments